சிறையிலிருக்கும் புலிகளிற்கு அஞ்சும் கோத்தா!
விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறைப் பொறுப்பாளர் பொட்டுஅம்மானுக்கு மிகவும் நெருக்கமானவரென கொழும்பு தரப்புக்கள் சொல்லும் மொறிஸ், கோத்தபாய கொலை முயற்சியிலும் தொடர்புபட்டதாக தெரியவருகின்றது.அத்துடன் கொழும்பில் பல உயர்மட்டத் தாக்குதல்களுக்குப் பொறுப்பாக இருந்தவர்.
தற்போது தடுப்புக்காவலில் உள்ள அவர், நீதிமன்றத் தீர்ப்புக்காக காத்திருக்கிறார்.
பருத்தித்துறைப் பொறுப்பாளராக முன்னர் இருந்த மொறிஸ், இந்திய அமைதிப்படைக்கு எதிரான தாக்குதல்களிலும் பங்கேற்றவரென கோத்தா தரப்பு சொல்லிவருகின்றது.
சாள்ஸின் நெருங்கிய சகாவான மொறிஸ் உள்ளிட்டவர்கள் விடுவிக்கப்பட்டால் தான் பழிவாங்கப்படலாமென்ற அச்சம் கோத்தாவிடமுண்டு.
இந்நிலையில் மைத்திரி –ரணில் அரசு அவரை விடுவிக்க முற்பட்டுள்ளதாக கோத்தா தரப்பு தகவல்களை வெளியிட்டுவருகின்றது.
இந்நிலையிலேயே இவர் விடுவிக்கப்பட்டு விட்டார் என்று வெளியான தகவல்களில் உண்மையில்லை என்று மூத்த புலனாய்வு அதிகாரிகளகொழும்பு ஊடகமொன்றிற்கு தெரிவித்துள்ளனர்.
Post a Comment