காணாமல் போனோர் அலுவலகத்தின் முழுமையான கட்டமைப்பு


காணாமல் போனோர் அலுவலகத்தின் முழுமையான கட்டமைப்பு, எதிர்வரும் ஓரிரு மாதங்களில் உறுதிசெய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
அந்த அலுவலகத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலியபீரிஷ், இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.
 
எதிர்வரும் முதலாம் திகதி முதல் நாவலையில் தற்காலிக கட்டிடம் ஒன்றில் இந்த அலுவலகம் இயங்கவுள்ளது.
 
தற்போது காணாமல் போனோர் அலுவலகத்தின் செயலாளராக, தேசிய பொருளாதார அமைச்சின் முன்னைய செயலாளர் எம்.ஐ.எம். ரஃபீக் நியமிக்கப்பட்டுள்ளார்.
 
அத்துடன் குறித்த அலுவலகத்துக்கான ஆளணித் தெரிவுகளும் தற்போது இடம்பெற்று வருகிறது.
 
இந்தநிலையில் எதிர்வரும் ஓரிரு மாதங்களில் குறித்த அலுவலகத்தின் இறுதி கட்டமைப்பு நிறைவு செய்யப்பட்டு, பணிகள் தொடக்கப்படும் என்றும் ஜனாதிபதி சட்டத்தரணி சாலியபீரிஷ் தெரிவித்துள்ளார்.

No comments