முதலமைச்சர் நிதியம் தொடர்ந்தும் மைத்திரியின் கிடப்பில்!


வடமாகாண முதலமைச்சர் நிதியத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுவிட்டதான அறிவிப்பு திரிபுபடுத்தப்பட்ட பொய் தகவல் என வடமாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இன்றிரவு ஆளுநர் ரெஜினோல்ட் கூரேயுடன் கொழும்பில் அவசர சந்திப்பொன்றை அவர் நடத்தியுள்ளார்.


வடமாகாணசபையின் நிர்வாகத்தை சுமூகமாக முன்னெடுக்க ஏதுவாக நோய்வாய்ப்பட்டு கொழும்பில் சிகிச்சை பெற்றுவரும் ஆளுநரை முதலமைச்சர் நேரில் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளதுடன் அது தொடர்பில் ஊடகங்களிற்கு அறிக்கையிட்டுள்ளார்.

முதலமைச்சர் நிதியத்திற்கான அனுமதி விவகாரம் தொடர்ந்தும் இலங்கை ஜனாதிபதி வசமே கிடப்பிலுள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் நிதியத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுவிட்டதாக ஊடகங்களில் வெளிவந்த செய்திகளையும் முதலமைச்சர் மறுதலித்துள்ளார்.

No comments