அடுத்தமுறை முதலமைச்சர் வேட்பாளர் விக்னேஸ்வரன் அல்லவாம்!

அடுத்த முறை வடக்கு மாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்படமாட்டர் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். “ 2 வருடங்கள் மட்டுமே வடமாகாண முதலமைச்சராக இருப்பேன் எனவும், பின்னர் மாவை சேனாதிராஜா முதலமைச்சராக இருக்கவேண்டும் என்றும் கூறிய ஒருவரை 5 வருடங்கள் முதலமைச்சராக இருக்க வைத்திருக்கிறோம்.

இனியும் அவரை கஸ்டப்படுத்த கூடாது. ஆகவே அடுத்த மாகாணசபை தேர்தலில் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்படமாட்டர் என கூறியுள்ளார். முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை 2013ஆம் ஆண்டு முதலமைச்சர் வேட்பாளராக அழைத்த போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளுக்கு முதலமைச்சர் ஒரு நிபந்தனையை விதித்திருந்தார்.

2 வருடங்கள் மட்டுமே முதலமைச்சராக இருப்பேன் என்றும் அதன் பின்னர் தம்பி மாவை சேனாதிராஜா முதலமைச்சராக இருக்கவேண்டும் என்பதே அந்த நிபந்தனை என்றும் அவர் கூறியுள்ளார். பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பேசிய போது 2 வருடங்கள் என கூறுவது பொருத்தமற்றது என கூறியிருந்தார். இதற்கு நான் மட்டுமல்ல பலர் சாட்சியாக இருக்கிறார்கள். இவ்வாறு 2 வருடங்கள் மட்டுமே முதலமைச்சராக இருப்பேன் என கூறிய ஒருவரை 5 வருடங்கள் முதலமைச்சராக இருக்க வைத்து விட்டோம். அவரை இனியும் கஸ்டப்படுத்த கூடாது. ஆகவேதான் அடுத்த மாகாணசபை தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாணசபை முதலமைச்சர் வேட்பாளராக சீ.வி.விக்னேஷ்வரன் நிறுத்தப்படமாட்டார் என நான் கூறியது உண்மையே என சுமந்திரன் கூறியுள்ளார்.

No comments