வவுனியா நகரசபை கூட்டமைப்பிற்கில்லை!


வவுனியா நகரசபையினை கூட்டமைப்பு பாணியில் அதனை கவிழ்த்து ஆட்சி பீடமேறியுள்ளது ஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முன்னணி.



நகரசபைக்கான முதலாவது சபை அமர்வும் தவிசாளர் தெரிவும் இன்று இடம்பெற்றது. அமர்வின் போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாகலிங்கம் சேனாதிராசாவுக்கும் தமிழர் விடுதலை கூட்டணியின் சார்பில் இராசலிங்கம் கௌதமனிற்கும் தவிசாளர் பதவிக்கு போட்டியேற்பட்டது. 


பகிரங்க வாக்களிப்பின் போது கூட்டமைப்பின் சேனாதிராசா 09 வாக்குகளையும் கூட்டணியின் கௌதமன் 11 வாக்குகளையும் பெற்றதன் அடிப்படையில் கூட்டணி ஆட்சியை கைப்பற்றிக்கொண்டது.


கூட்டணிக்கு ஆதரவாக ஐக்கிய தேசிய கட்சி, சுதந்திரக்கட்சி, ஈ.பி.டி.பி. ஆகியன வாக்களித்தன. தமிழ் தேசிய மக்கள் முன்னனி நடுநிலை வகித்தது. தென்னிலங்கை கட்சிகளின் ஆதரவோடு தமிழர் விடுதலை கூட்டணியின் கௌதமன் வவுனியா நகரசபையின் தலைவராக தெரிவாகியுள்ளார். இதேவேளை உப தவிசாளராக சுதந்திர கட்சியின் குமாரசுவாமி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

No comments