நெதர்லாந்தில் நடைபெற்ற பிரிகேடியர் தமிழேந்தி நினைவு கரப்பந்தாட்டப் போட்டிகள்!

நெதர்லாந்தில் தமிழேந்தி அவர்களின் நினைவு சுமந்த கரப்பந்தாட்டப் போட்டிகள் ‎‎‎14-04-2018 சனிக்கிழமையன்று warnsveld என்னும் இடத்தில் இடம்பெற்றது.

காலை 10.00 மணியளவில் பொதுச்சுடர் ஏற்றல், ஈகைச்சுடர் ஏற்றல், அதனைத் தொடர்ந்து பிரிகேடியர் தமிழேந்தி அவர்களின் திருவுருவப் படத்திற்கு விளையாட்டு வீரர்களின் மலர்வணக்கத்தைத் தொடர்ந்து அகவணக்கத்துடன் போட்டிகள் ஆரம்பமானது.   
                    
இதில் வெற்றியீட்டிய கழகங்களின் விபரங்களாவன. 

ஆறு பேர் கொண்ட போட்டிகள்

முதலாம் இடம்: நண்பர்கள் விளையாட்டுக்கழகம் Alkmar

இரண்டாம் இடம்: ஜேர்மன் விளையாட்டுக்கழகம் Germany,
மூன்றாம் இடம்: தமிழர் ஒன்றிய விளையாட்டுக்கழகம் Beverwijk.

நான்கு பேர் கொண்ட போட்டிகள்

முதலாம் இடம்: தமிழர் ஒன்றியம் A விளையாட்டுக்கழகம் Beverwijk

இரண்டாம் இடம் ஜேர்மன் A விளையாட்டுக்கழகம் Germany ,

மூன்றாம் இடம்: ஜொலி போய்ஸ் A விளையாட்டுக்கழகம் Beverwijk
 
இறுதியில் வெற்றியீட்டிய கழகங்களுக்கான வெற்றிப்பதக்கங்கள், வெற்றிக்கேடயங்கள் வழங்களுடன் கரப்பந்தாட்டப்போட்டிகள் யாவும் இனிதே நிறைவுபெற்றன.  
















No comments