பருத்தித்துறையில் வீட்டில் தனித்திருந்த தாயும், மகளுக்கும் தாக்குதல்


யாழ்ப்பாணம் – பருத்தித்துறை, அம்பன் பகுதியில் வீட்டில் தனித்திருந்த தாயும், மகளும் சற்றுமுன்னர் அடிகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். இதில் பலத்த தாக்குதலுக்கு இலக்காகி இரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்ட மகள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், தாயார் பருத்தித்துறை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். உயிரிழந்த மகளுக்கு 58 வயது எனக் கூறப்படுகிறது. இந்த சம்பவத்துக்கான காரணம் வெளியாகவில்லை. மேலும், சம்பவ இடத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments