மத்தளவில் பறவை மோதியதால் தரையிறக்கப்பட்டது பிளை டுபாய் விமானம்!

கட்டுநாயக்கவில் இருந்து மத்தள ஊடாக டுபாய் செல்லவிருந்த பிளை டுபாய் விமானத்தின் இடது பக்கம் பறவை ஒன்று மோதியதால், குறித்த விமானம் மத்தள விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமானநிலையத்திலிருந்து 113 பயணிகளுடன் மத்தளைக்கு சென்ற விமானம் அங்கிருந்த 55 பயணிகளையும் ஏற்றிக்கொண்டு டுபாய்க்கு செல்ல தயாராகவிருந்தது.

எனினும், பறவை மோதியதால், காலை 7.11 இலிருந்து விமானம் மத்தள விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. டுபாய் செல்வதற்கு கட்டுநாயக்கவில் இருந்து விமானத்தில் ஏறிய 113 பயணிகளும், மத்தள விமான நிலையத்தில் இருந்த 55 பயணிகளும் தொடர்ந்து மத்தளை விமான நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களுக்கு போதிய வசதிகள் இன்மையால் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது

No comments