விடுதலைப் புலிகளின் முதலாவது வான்வழித் தாக்குதல் இடம்பெற்ற நாள்!

இலங்கையின் மேற்கே கட்டுநாயக்க இராணுவ வான் தளத்தில் விடுதலைப் புலிகளின் முதலாவது வான்வழித் தாக்குதல் இடம்பெற்ற நாள் இன்றாகும். இரண்டு விமானங்கள்மூலம் கட்டு நாயக்கவுக்குச் சென்ற வான் புலிகள் அங்கு நான்கு குண்டுகளை வீசியதன் மூலம் தமது வலுமிக்க அறிமுகத்தை உலகிற்குக் காட்டினர்.
taf_4
இந்த முதலாவது தாக்குதல் கடந்த 2007ஆம் ஆண்டு மார்ச் மாதம் 26ம் திகதி அதிகாலை 1.45 மணியளவில் இடம்பெற்றது. இந்த தாக்குதலின் பின்னரே விடுதலைப் புலிகளின் விமானப் படை தொடர்பான சந்தேகங்கள் முடிவுக்கு வந்தன.
taf_5
வான் புலிகளின் முதலாவது தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட குண்டுகள் உள்ளூர் தயாரிப்புக்கள் என கூறப்பட்டது. அதில், வான்கலங்களேடு பொருத்தப்பட்ட சில இணைப்புப் பாகங்கள், வானோடிகளின் (விமானி) கட்டுப்பாட்டில் இயங்கும் இலத்திரனியல் குண்டு விடுவி மற்றும் குண்டுகள் ஆகியவை உள்ளூர் தயாரிப்புக்கள். என அரச தரப்பால் தெரிவிக்கப்பட்டது.
இவை விமானங்கள் பற்றிய தொழில்நுட்ப வளம் புலிகளிடம் இருப்பதைக் காட்டுவதாக அமைந்துள்ளதென அப்போது பேசப்பட்டது.
taf_6
கட்டுநாயக்கா விமான நிலையத்தின் மீது வீசப்பட்ட 4 குண்டுகளில் 1 வெடிக்கவில்லை, வெடிக்காத ஒன்றை ஆராய்ந்த இலங்கை அரச தரப்பினர் இவற்றில் பல நூற்றுக்கணக்கான உருக்கு உருளைகள் காணப்பட்டதை அவதானித்தனர். இதனை வைத்து இவை உள்ளூர்த் தயாரிப்பென சண்டே ரைம்ஸ் பத்திரிகையில் இராணுவப் புலனாய்வு ஆசிரியர் இக்பால் அத்காஸ் தெரிவித்தார்.
வான்கலத்தை இரவில் ஓட்டிச் சென்று ஓர் இலக்கை அழிக்கும் திறன் இலகுவில் பெறக்கூடிய செயற்திறன் இல்லை. மாறாக, நீண்ட கால படிப்பறிவும், பட்டறிவும் தேவை. வான்புலிகளின் இத்திறன் கட்டுனாயக்க விமானத் தளத் தாக்குதலுக்கு அடுத்து நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
taf_10
விடுதலைப் புலிகளின் விமானங்கள் பெரும்பாலும் இலங்கை பாதுகாப்புத் தரப்பினரின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டே தாக்குதல்களை மேற்கொண்டிருந்தன. குறிப்பாக இந்திய அரசாங்கத்தால் இலங்கைக்கு வழங்கப்பட்ட அதி சக்தி வாய்ந்த ராடர் கருவிகளில்கூட விடுதலைப் புலிகளின் விமானங்களின் பறப்பினை அறிந்துகொள்ளமுடியாமல் பாதுகாப்புத் தரப்பு திக்குமுக்காடியது.
குறிப்பாக கடல்வழியாக மிகுந்த தாழ்வாக இந்த விமானங்கள் பறப்பினை மேற்கொண்டமையினால் ராடர் கருவிகளின் வீச்செல்லைக்கு பாரிய சவாலாய் அமைந்தது.
taf_11
போர் நடந்த காலத்தில் பல வெற்றிகரத் தாக்குதல்களை மேற்கொண்டிருந்த வான்புலிகள் இறுதியாக 2009 ஆம் ஆண்டு பெப்ரவரி 20 இல் நடத்திய வான் கரும்புலித் தாக்குதல் மூலம் தமது தாக்குதல்களினை முடிவுக்கு கொண்டுவந்தனர்.

No comments