தமிழீழ தேச தொப்புள்கொடி உறவின் தமிழின விடுதலை உணர்வொன்று மறைந்தது!
முனைவர் ம.நடராசன் அவர்களின் மறைவு குறித்து தமிழர்
ஒருங்கிணைப்புக்குழு பிரான்சும் அதன் உபகட்டமைப்புக்களும் இரங்கல் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஒருங்கிணைப்புக்குழு பிரான்சும் அதன் உபகட்டமைப்புக்களும் இரங்கல் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தஞ்சைப் பெரிய கோவில் கொண்ட தஞ்சை மாவட்டத்தில், விளார் கிராமத்தில் பிறந்த முனைவர் ம. நடராசன் அவர்களின் உயிர் இழப்பானது மிகுந்த வேதனையைத் தந்துள்ளது. 1960 களில் தனது இளமைப்பருவகாலத்தை திராவிட இயக்கங்களிலும் , தமிழ் மொழியிலும் மிகவும் பற்றுக் கொண்டவராக தன்னை உருவாக்கியதிலிருந்து அவர் சாவடையும் வரை தமிழுக்காக செய்த வரலாற்றுக்கடமைகளை எம் நெஞ்சில் நிலைநிறுத்திப் பார்க்கின்றோம்.
மொழி ரீதியாகவோ, மத ரீதியாகவோ, பண்பாடு, அரசியல் ரீதியாகவோ ஆதிக்கம் செலுத்தக் கூடாது என்பது இந்திய தேசத்தின் அடிப்படை அறமாகும். அந்த அறத்தை மீறி இந்திமொழித் திணிப்பை நாடுமுழுவதும் மேற்கொண்ட போது அதற்காகப்போராடி 05.01.1939 ல் முதலில் பலியானவர் ஆதித் திராவிடர் வகுப்பைச்சேர்ந்த எல். நடராசன் ஆகும். அவரைப் பின்பற்றிய அமரர். ம. நடராசன் அவர்கள் இந்திய தேசத்தின் இந்தி எதிர்ப்புக்கு எதிராக தன்னை ஈடுபடுத்திக்கொண்ட அனுபவமும், அதன் தாக்கமும் தான், தமிழீழ தேசத்தின் மீதும், தமிழ்மக்கள் மீதும் சிங்கள பேரினவாதம் மேற்கொண்ட சிங்களத் திணிப்பையும், அதன் தாக்கத்தையும் இவரால் புரிந்து கொள்ள முடிந்திருந்தது.
ஓர் இலக்கியவாதியாக, முனைவராக, அரசியல்வாதியாக, கலைஞராக, மனிதநேயம் கொண்டவராக, கொடைவள்ளலாக, விடுதலைப் போராளியாக இவரின் பன்முகத் தன்மையை ஒவ்வொரு காலகட்டங்களிலும் கண்கூடாக கண்டிருக்கின்றோம்;. தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் உண்மைத் தன்மையினை அப்போராட்டத்தை முன்னெடுத்த விடுதலை அமைப்பினையும் உள்ளன்புடன் நேசித்தவர். அவர் இருந்த அரசியல் சூழ்நிலையில் அவற்றை வெளிப்படுத்த முடியாதவராய் அக்காலத்தில் கட்டுண்டு கிடந்த போதும் மத்திய அரசிடமும், மாநில அரசிடமும் தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் நியாயத்திற்க்காக இவர் மனசீகமாகப் போராடி வந்ததை பின்நாளில் தான் அனைவரும் அறிந்து கொண்டனர்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் நியாயப்பாட்டை சர்வதேசத்தின் செவிகளுக்கு எடுத்தியம்பிய பல்வேறு தமிழின விடுதலை உணர்வாளர்கள் குரலுடன் அமரர்.ம. நடராசன் அவர்களின் குரலும் இருந்திருந்தது என்பது மறுக்க முடியாத உண்மையாகும். குரல் கொடுத்தால் மட்டும் பேதாது நேரடியாக செயற்பாட்டிலும் காட்ட வேண்டும் என்பதற்கமையவும், அதனை எதிர்ப்பவர்களின் முகத்திரையை தமிழ்பேசும் நல் உலகிற்க்கு காட்ட வேண்டும் என்பதற்கமைய பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டு ஐயா, பழ , நெடுமாறன் அவர்களின் தூரத்துப்பார்வையின் சிந்தனைக் கனவை நனவாக்கி ‘முள்ளிவாய்க்கால் முற்றம்’ என்ற ஈழத்தமிழர்களின் வீரம்செறிந்த வரலாற்றுச்சின்னங்களை பறைசாற்றி 1000 வருடங்களுக்கு மேலாக அசையாது உலகம் கண்டு வியக்கும் தஞ்சைப்பெருங்கோயில் அமைந்துள்ள தஞ்சாவூரில் நிறுவி, வரலாற்றில் மீண்டுமொரு அத்தியாயத்தை தமிழனம் எழுதுவதற்கு காரணமாய் இருந்தவர் அமரர். ம. நடராசன் அவர்கள். அது மாத்திரமின்றி nஐனீவா, பிரித்தானியா, பிரான்சு, மொறிசியசு, போன்ற நாடுகளுக்கு தனது 70வது அகவையில் பயணம் செய்து தமிழ் பற்றையும், அதற்காக உயிர்தந்த மாவீரர்களையும், மக்களையும் பற்றிப் பதிவுகளை ஏற்படுத்தியிருந்தார்.
தமிழர்களின் தொன்மையையும், வரலாற்றையும், அடுத்த தiமுறைக்கும், மக்களுக்கும் செல்லும் வகையில் ‘வெடிக்கும் வேர்கள’; என்ற குறுந்தகடு, மொழிப்போராட்டம் சம்பந்தமான ‘உயிருக்குநேர்’ என்ற வரலாற்று நூல் போன்ற வெளியீடுகள் இவர் அடுத்த தலைமுறைக்கு கொடுத்துவிட்டுச் சென்றவையாகும்.
இவர் உயிர் பிரிவானது அத்தனை தமிழ் உள்ளங்களுக்கும் ஒர் பேர் இழப்பாகும். இவரின் பிரிவுத்துயரில் இருக்கும் குடும்பத்துடன் பிரான்சு வாழ் தமிழீழ மக்கள் தமது துயரினை பகிர்ந்து கொள்வதுடன் அமரர்.ம.நடராசன் அவர்களின் தமிழ் மீதான பற்றுக்கு எம் தலைகளை சாய்த்து மீண்டும் எமது இனத்தின் வெற்றிக்காக வீரியத்துடன் தலைகளை உயர்த்திக் கொள்கின்றோம்.
‘ தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம’
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சும் அதன் உப கட்டமைப்புக்களும்
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment