யோஷித ராஜபக்ஷ மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதிக்கு எதிரான ஊழல் வழக்கு – ஒக்டோபர் 29ஆம் திகதிக்கு விசாரணை ஒத்திவைப்பு!


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் மகன் யோஷித ராஜபக்‌ஷ மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னகோடா ஆகியோருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஊழல் வழக்கு தொடர்பில் கொழும்பு உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது.

யோஷித ராஜபக்‌ஷ மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னகோடா ஆகியோருக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் இலஞ்ச ஆணைக்குழு தாக்கல் செய்துள்ள வழக்கு விசாரணைக்காக, யோஷித ராஜபக்‌ஷ இன்று (13) செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்திற்கு வருகை தந்து ஆஜராகியிருந்தார்.

இதன்போது, கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி ரஷாந்த கொடவெல முன்னிலையில் இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இரு தரப்புச் சமர்ப்பணங்களையும் பரிசீலித்த நீதிபதி, வழக்கின் மேலதிக நடவடிக்கைகளை எதிர்வரும் 29ஆம் திகதிக்கு ஒத்திவைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கு எதிர்வரும் 29ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments