செம்மணிக்கு நீதி கேட்ட பாலகனின் பெற்றோர் ஆசிரியையிடம் விசாரணை


யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற முன்பள்ளி விளையாட்டு போட்டியில் வினோத போட்டியில் பாலகன் ஒருவர் செம்மணி புதைகுழிக்கு நீதி கோரிய நிலையில் , பாலகனின் பெற்றோர் மற்றும் முன்பள்ளி ஆசிரியையிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் 

வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்று வடக்கு சென் பிலிப் நேரிஸ் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா நேற்றைய தினம் திங்கட்கிழமை புனித பிலிப்பு நேரியார் ஆலய முன்றலில் இடம்பெற்றது

விளையாட்டு போட்டியின் இறுதியில் வினோத உடை போட்டியில், முன்பள்ளி பாலகர்கள், பல்வேறு வேடங்கள் தரித்து போட்டியில் கலந்து கொண்டனர். 

அதில் ஒரு பாலகன் " பல ஆண்டுக்கு முன்னர்  அம்மாவின் மார்பில் பால் அருந்திக்கொண்டு இருக்கும் போது என்னை புதைத்து விட்டார்கள் எனக்கு நீதி கிடைக்குமா?" என கோரி போட்டியில் கலந்து கொண்டான்.

இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் , மருதங்கேணி பொலிஸார் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை பாலகனின் பெற்றோர் மற்றும் , முன்பள்ளி ஆசிரியை ஆகியோரை மருதங்கேணி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து விசாரணைகளை முன்னெடுத்தனர். 

No comments