பருத்தித்துறையில் தியாக தீபத்திற்கு அஞ்சலி
ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு உயிர்நீத்த தியாகி திலீபனின் 39ஆவது நினைவேந்தலின் இறுதி நாள் நிகழ்வுகள் பருத்தித்துறையிலும் இடம்பெற்றன.
பருத்தித்துறை முருகன் கோயிலடியில் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினைவுத் தூபியில் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றன.
நிகழ்வில் ஈகைச்சுடரை போராளி சி. வேந்தன் ஏற்றிவைத்தார். தொடர்ந்து காணாமல் ஆக்கப்பட்ட போராளி அன்புவின் மனைவி விஜயபாமா மற்றும் யாழ்ப்பாணம் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத் தலைவி கோதை ஆகியோர் தியாக தீபத்தின் திருவுருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்தனர். தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் மலர் அஞ்சலி செலுத்தினர்.






Post a Comment