22ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் போராட்டம்


அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதித்துறை (திருத்த) சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த சட்டமூலங்கள் “ஜனநாயகத்தின் மரணத்தை” பிரதிபலிப்பதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதித்துறை (திருத்த) சட்டமூலம் ஆகியவை நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.

சட்டமூல்கள் சமர்ப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து சபையில் அமைதியற்ற நிலை ஏற்பட்டதுடன், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பல ஒழுங்குப் பிரச்சினைகளையும் எழுப்பினர்.

No comments