கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் படுகொலை தொடர்பாக பிள்ளையன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்


முன்னாள் கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத்தின் கடத்தல் மற்றும் கொலை படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக, முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன்  மற்றும் மேலும் மூன்று பேருக்கு எதிராக இலங்கை சட்டமா அதிபர் பொலன்னறுவை உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகைகளைத் தாக்கல் செய்துள்ளார்.

ஜெயந்தன் என அழைக்கப்படும் கதிர்காத்தம்பி ஜெயகிஷன், நிமல் என்று அழைக்கப்படும் நிமல் தேவ்சுகன், மற்றும் சிம்பு அல்லது நகுலன் என்று அழைக்கப்படும் நடராசா நகுலேந்திரன் ஆகிய மூவர் மீதும் பிள்ளையானுடன் இணைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வழக்கின்படி, அந்தக் கல்வியாளர் 2006 டிசம்பர் 16 முதல் 18-ஆம் திகதிக்குள் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார் என்பது நினைவூட்டத்தக்கது.

No comments