சைப்ரஸ் கடற்பகுதியில் 260க்கும் மேற்பட்டோரை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்தது
வடக்கு சைப்ரஸ் கடற்கரைக்கு அருகே இன்று ஞாயிற்றுக்கிழமை துறைமுகத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே பயணிகள் படகு ஒன்று கவிழ்ந்ததாக உள்ளூர் அரசாங்கம் தெரிவித்தது.
வடக்கு சைப்ரஸ் துருக்கிய குடியரசின் (TRNC) பிரதமர் உனல் உஸ்தலை மேற்கோள் காட்டி, குறைந்தது எட்டு பேர் உயிரிழந்துள்ளதாக துருக்கிய அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சுமார் 237 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், 23 பேரைக் காணவில்லை என்றும் உஸ்டெல் தெரிவித்தார்.
கப்பலின் கேப்டன் மற்றும் ஏழு பணியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் அறிவித்தார்.
சைப்ரஸ் 1974 முதல் பிரிக்கப்பட்டுள்ளது.அதன் வடக்குப் பகுதி துருக்கியால் மட்டுமே சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட TRNC-யின் நிர்வாகத்தின் கீழ் உள்ளது.
சைப்ரஸ் குடியரசு தீவின் தெற்குப் பகுதியில் உள்ள மூன்றில் இரண்டு பங்கைக் கட்டுப்படுத்துகிறது. இது சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடாகும்.
வடக்கு சைப்ரஸின் துருக்கியக் குடியரசு (TRNC) :தீவின் வடக்குப் பகுதியில் மூன்றில் ஒரு பங்கைக் கட்டுப்படுத்துகிறது. இது 1974 துருக்கியப் படையெடுப்பிற்குப் பின்னர் நிறுவப்பட்ட ஒரு சுயமாக அறிவிக்கப்பட்ட நாடாகும். இதை துருக்கி மட்டுமே அங்கீகரிக்கிறது.

Post a Comment