6 ஆண்டுகளில் 1,178 சிறைக் கைதிகள் தப்பியோடினர்


2019 முதல் 2025 வரையிலான 6 ஆண்டுகளில் மொத்தம் 1,178 கைதிகள் சிறைகளில் இருந்து தப்பிச் சென்றுள்ளனர் என சிறைத்துறை வெளியிட்ட புள்ளிவிவர அறிக்கை ஒன்று வெளிப்படுத்தியுள்ளது.

அதன்படி, 2019-ல் 153 கைதிகளும், 2020-ல் 110 கைதிகளும், 2021-ல் 103 கைதிகளும் தப்பிச் சென்றுள்ளனர்.

மேலும், 2022-ஆம் ஆண்டில் 231 கைதிகளும், 2023-ல் 207 கைதிகளும், 2024-ல் 188 கைதிகளும், 2025-ல் 186 கைதிகளும் சிறைகளில் இருந்து தப்பிச் சென்றதாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

தப்பிச் சென்ற கைதிகளில் 474 பேர் மீண்டும் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் 704 கைதிகள் இன்னும் தலைமறைவாக உள்ளனர்.

No comments