யாழில் நீதிக்கான நீள் பயணம்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சர்வதேச தினத்தினை முன்னிட்டு, வடக்கு கிழக்கு இணைந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினால் யாழ்ப்பாணத்திலே "நீதிக்கான நீள் பயணம்" எனும் சர்வதேச மாநாடு நடைபெற்றது.
யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாநாடு நடைபெற்றது.
மாநாட்டிற்கு முன்னதாக , உலக தமிழாராய்ச்சி மாட்டில் படுகொலையானவர்களின் நினைவு தூபியில் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்று , அங்கிருந்து பேரணியாக தந்தை செல்வா கலையரங்கிற்கு வருகை தந்து மாநாடு ஆரம்பமானது.
மாநாட்டில், தூதரக பிரதிநிதிகள் , வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் வடக்கு கிழக்கை சேர்ந்த உறவுகள் , அரசியல் பிரதிநிதிகள் , சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் , பல்கலைக்கழக மாணவர்கள் , என பெரும் திரளானோர் கலந்து கொண்டனர்.







Post a Comment