வீடுகளுக்குத் திரும்பினர்!
நேற்று முன்தினம் பண்டத்தரிப்பு பகுதியில் நடைபெற்ற திருவிழாவைத் தொடர்ந்து, கண் வலி, எரிச்சல் மற்றும் கண்களைத் திறப்பதில் சிரமம் உள்ளிட்ட அறிகுறிகளுடன் 375 பேர் நேற்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றனர்.
தேவையான பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளின் பின்னர், கண் விடுதிகளில் அனுமதிக்கப்பட்டிருந்த அனைவரும் தற்போது வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.
வீடு திரும்பியவர்கள் வைத்தியசாலையினால் வழங்கப்பட்ட கண் மருந்துகளை வைத்திய ஆலோசனைக்கு ஏற்ப தொடர்ச்சியாகவும் முறையாகவும் பயன்படுத்துமாறு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

Post a Comment