இரண்டு கிராமிற்கு ஆயுள் தண்டனை!





இரண்டு கிராமிற்கும் அதிகமான ஹெரோயினை உடைமையில் வைத்திருந்தமை, வியாபாரம் செய்தமை ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகளுக்கு குற்றவாளியாகக் காணப்பட்ட இளைஞனுக்கு ஆயுள் தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா தீர்ப்பளித்துள்ளார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம், வவுனியா, செட்டிகுளம், மெனிக்பாம் பிரதேசத்தில் இக் குற்றச் செயல் இடம்பெற்றுள்ளது. 

இது தொடர்பான வழக்கின் குற்றப்பகிர்வு பத்திரம் 2021 ஆம் ஆண்டு வவுனியா மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வந்தது.

எதிரி மீதான குற்றச்சாட்டுகள் நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கப்பட்டதால், எதிரி குற்றவாளியாகக் காணப்பட்டு ஆயுள்தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


No comments