கிளிநொச்சியில் பொலிஸாருக்கு லஞ்சம் வழங்கி மணல் கடத்த முற்பட்ட 06 பேர் கைது
யாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியில் பரந்தன் பகுதியில் காணப்படுகின்ற வீதிச் சோதனை சாவடியில் பொலிசாருக்கு லஞ்சம் வழங்க முற்பட்ட 06 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்
பரந்தன் வீதிச் சோதனைச்சாவடியில், இன்றைய தினம் பொலிசாருக்கு இலஞ்சம் வழங்கி சட்விரோத மணலை கொண்டு செல்ல முற்பட்ட டிப்பர் வாகன சாரதிகள் ஆறு பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஆறுபேரையும் இன்றைய தினம் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

Post a Comment