குறிகட்டுவான் படகு விபத்தில் சிக்கியவர்கள் யாழ்.போதனாவில்


யாழ்ப்பாணம் குறிகட்டுவான் கடற்பகுதியில் இடம்பெற்ற படகு விபத்தில் , சிக்கிய 02 பெண்கள் உள்ளிட்ட 10 பேரும் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் 

குறிகட்டுவான் இறங்குதுறையில் இருந்து , நெடுந்தீவு நோக்கி நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை பயணித்த தனியாருக்கு சொந்தமான சிறிய ரக படகு , புறப்பட்டு சில நிமிடங்களில் கடுமையான காற்று மற்றும் கடலடியால் கடலில் கவிழ்ந்து. 

அதனால் , படகில் பயணித்த 10 பேரும் கடலில் மூழ்கினர். அதனை கண்ணுற்றவர்கள் , உடனடியாக தமது படகில் விரைந்து அவர்களை மீட்டு , நயினாதீவு வைத்தியசாலையில் அனுமதித்தனர். 

நயினாதீவு வைத்தியசாலையில் ஆரம்ப சிகிச்சை வழங்கப்பட்டு , மேலதிக சிகிச்சைக்காக அவர்கள் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். 

குறித்த படகு விபத்தில் , படகோட்டிகள் இருவர் , நெடுந்தீவை சேர்ந்த 07 பேர் மற்றும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவருமாக 10 பேர் சிக்கிய நிலையில் அவர்கள் அனைவரும் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

No comments