மட்டக்களப்பு சென்றல் வீதி பாஸார் வீதி கடைகளில் தீ விபத்து

மட்டக்களப்பு நகரில் சென்றல் வீதி மற்றும் பஸார் வீதியிலுள்ள கடைகளில் இன்று (7) செவ்வாய்க்கிழமை அதிகாலை 5.00 மணியளவில் தீப்பற்றியுள்ளது.

இதனை அடுத்து, மட்டு.மாநகர சபை தீயணைப்பு பிரிவு மற்றும் பொலிஸ் தீயணைப்பு பிரிவு இணைந்து 4 மணித்தியாலம் போராட்டத்தின் பின்னர் காலை 9.00 மணிக்கு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

எனினும், சென்றல் வீதியில் உள்ள சிறுவர் ஆடை விற்பனை கடை தொகுதி மற்றும் பஸார் வீதியில் உள்ள கையடக்க தொலைபேசி திருத்தும் கடை முற்றாக எரிந்து சாம்பலாகியதுடன், தங்க ஆபரண கடைகள் உட்பட 5 கடைகளுக்கு சேத மேற்பட்டுள்ளது.

தீ விபத்தினால் குறித்த இரு வீதிகளிலும் தற்காலிகமாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டிருந்தன.

இந்த தீ விபத்து தொடர்பாக மட்டு. தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

No comments