நாளை பல பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிக்கும்
இலங்கையின் பல பகுதிகளில் நாளையும் காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், மாத்தளை, ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் காற்றின் வேகம் மணிக்கு 50 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடும் என்று அந்மையகம் கூறியுள்ளது.
மேலும், மேற்கு, சபரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Post a Comment