முன்சனில் சரக்குத் தொடருந்து தடம் புரண்ட விபத்தில் ஒருவர் படுகாயம்

பவேரியாவின் தலைநகரான முன்சனில் இன்ற சனிக்கிழமை சரக்கு தொடருந்து தடம் மாறியதில் இரண்டு பெட்டிகள் பாலத்தின் ஓரத்தில் தொங்கிக்கொண்டிருந்த நிலையில், ஒருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்தது.
இந்தச் சம்பவம் சரக்கு தொடருந்துகளுக்கு மட்டுமேயான தண்டவாளத்தில் நிகழ்ந்ததாகவும், பிராந்திய அல்லது நீண்ட தூரப் பயணங்களுக்கு எந்த இடையூறும் ஏற்படாது என எதிர்பார்க்கப்படுவதாகவும் ரயில்வே நிறுவனமான டாய்ச் பான் (DB) தெரிவித்துள்ளது.
தடம் புரண்ட விபத்தில், இதுவரை அடையாளம் காணப்படாத அபாயமற்ற பொருட்களை ஏற்றிச் சென்ற இரண்டு தொடருந்துப் பெட்டிகள், ஐந்து மீட்டர் (16 அடி) உயரமுள்ள பாலத்தின் பக்கவாட்டில் இருந்து கீழே விழுந்தன. அந்தப் பெட்டிகள், பாலத்திற்கும் கீழே இருந்த சாலைக்கும் இடையில் சிக்கிக்கொண்டன.
பெட்டிகளை அகற்றுவதற்கு மீட்புக் குழுவினருக்கு எவ்வளவு காலம் தேவைப்படும் என்பது தெளிவாகத் தெரியவில்லை ஆனால் ஞாயிற்றுக்கிழமை வரை அப்பகுதி பாதிக்கப்படக்கூடும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
Post a Comment