டிரம்பின் சிகை அலங்காரம் கொண்ட எருமை மாடு விலங்குகள் சரணாலயத்திற்கு மாற்றப்பட்டது



வங்காளதேசத்தில் , அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் தனித்துவமான சிகை அலங்காரத்தை வியக்கத்தக்க வகையில் ஒத்த முடிகளைக் கொண்ட ஒரு அல்பினோ எருமை , கொல்லப்படுவதிலிருந்து தப்பித்து, உள்ளூர் விலங்குகள் சரணாலயதட ஒன்றில் பார்வையாளர்களின் விருப்பமான ஒன்றாக மாறியுள்ளது.

டாக்காவில் உள்ள மிர்ப்பூர் தேசிய மிருகக்காட்சிசாலையில், டொனால்ட் டிரம்ப் என்று அழைக்கப்படும் 700 கிலோகிராம் (1,550 பவுண்டு) எடையுள்ள மாட்டை அதன் புதிய இல்லத்தில் காண்பதற்காகப் பார்வையாளர்கள் வரிசையில் காத்திருக்கின்றனர்.

அந்த எருமை ஆரம்பத்தில் ஈத் பண்டிகையின்போது பலியிடப்படவிருந்ததாகவும், ஆனால் அரசாங்கத்தின் தலையீட்டைத் தொடர்ந்து கடைசி நிமிடத்தில் அது காப்பாற்றப்பட்டதாகவும் பங்களாதேஷ் செய்தித்தாளான 'தி டெய்லி ஸ்டார்' செய்தி வெளியிட்டுள்ளது.

டாக்காவில் உள்ள தேசிய விலங்கியல் பூங்காவிற்கு அந்த எருமையைக் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டதை அடுத்து, அதனை விட்டுவிடவும், உள்ளூர் வாங்குபவருக்குப் பணத்தைத் திருப்பித் தரவும் உள்துறை அமைச்சர் சலாவுதீன் அகமது உத்தரவிட்டார்.


பாதுகாப்புக் கவலைகள் மற்றும் அசாதாரணமான பொது ஆர்வம் காரணமாக, கடைசி நேரத்தில் எருமையைப் பலியிடுவதிலிருந்து காப்பாற்ற முடிவு எடுக்கப்பட்டது என்று அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

டாக்காவிற்கு வெளியே உள்ள நாராயண்கஞ்ச் என்னுமிடத்தில் ஒரு உள்ளூர் பண்ணையில் வளர்க்கப்பட்ட அந்த எருமை, தனது புதிய இருப்பிடத்திற்கு மாற்றப்பட்டதிலிருந்து, ஆர்வமுள்ள பார்வையாளர்களின் தொடர்ச்சியான வருகையை ஈர்த்து வருகிறது.

நான் டொனால்ட் டிரம்பைப் பார்ப்பதற்காகவே மிருகக்காட்சிசாலைக்கு வந்தேன் என்று 10 வயது சைஃபுல் இஸ்லாம் உணர்ச்சிபொங்கக் கூறியதாக ' தி டெய்லி ஸ்டார்' செய்தி வெளியிட்டுள்ளது.

No comments