பருத்தித்துறை மீனவர்கள் நிலை தெளிவில்லை!
பருத்தித்துறை பகுதியில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்ற இரண்டு படகுகள் காணாமல் போயுள்ள நிலையில் அதில் சென்ற தந்தை, மகன் உள்ளிட்ட மீனவர்கள் நால்வர் காணாமல் போயுள்ளனர்.
பருத்தித்துறை - முனை மற்றும் கற்கோவளம் பகுதிகளில் இருந்து நேற்று முந்தினம் (27) புதன்கிழமை கடலுக்கு சென்ற நான்கு மீனவர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.
பருத்தித்துறை முனை கடற்றொழிலாளர் சங்கத்தை சேர்ந்த கதிர்காமம் சோதிலிங்கம் (வயது 52), சுமியோம்பிள்ளை சுஜிக்குமார் (வயது 37) மற்றும் கற்கோவளம் பகுதியை சேர்ந்த சேர்ந்த பாலச்சந்திரமூர்த்தி இராமகிருஸ்ணன் (வயது 54) மற்றும் அவரது மகனான இராமகிருஸ்ணன் ரவிராஜ் ஆகியோர் காணாமல் போயுள்ளனர்
இதனிடையே கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் ஊடாக தேடுதல் நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு பணிப்புரை விடுத்துள்ளார்.
இன்று அதிகாலை விமானப்படையின் உதவியுடன் தேடுதல் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அண்டை நாடுகளின் கடற் பாதுகாப்பு பிரிவுகளுக்கும் காணாமல் போன மீனவர்கள் தொடர்பான தகவல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், சர்வதேச மட்டத்திலும் தேடுதல் நடவடிக்கைகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றனவென அமைச்சரின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

Post a Comment