பிக்குகள் பறக்க தடை?



இலங்கையினை சேர்ந்த ஒரு பிக்கு வெளிநாடு செல்வதாக இருந்தால் பௌத்த,சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சகம் அதற்கேற்ப விதிகளை அமல்படுத்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னர், ஒரு பிக்கு தனது குரு, பிராந்திய தலைமை பிக்கு மற்றும் அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரிவின் தலைமை பிக்கு ஆகியோரிடமிருந்து பரிந்துரையைப் பெற வேண்டும் என்ற ஒரு முறை நடைமுறையில் இருந்தது.

ஆனால் சில காரணங்களால் அந்த முறை கடந்த காலத்தில் ஒழுங்கற்றதாக இருந்தது.

அந்த முறை இனிமேல் அமல்படுத்தப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது

அனைத்து பிரிவுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பதிவாளர்கள் ஜனாதிபதியுடன் நீண்ட விவாதம் நடத்தி உடன்பாடு எட்டியதாகவும், வெளிநாடு செல்வதற்கு முன் பிரதான பொறுப்பாளர்களின் அனுமதியைப் பெறுவது கட்டாயமான விடயம் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக 21 தேரர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.


No comments