விதிமுறைகளின் படி நாங்கள் உடனடியாக வெளியேற வேண்டும் - டிரம்ப்
துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து விசாரித்து வருவதாக அமெரிக்க இரகசிய சேவை அமைப்பு தெரிவித்துள்ளது.
மற்றொரு ட்ரூத் சோஷியல் பதிவில் டிரம்ப், விதிமுறைகளின்படி, நாங்கள் இந்த வளாகத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று சட்ட அமலாக்கத் துறை கோரியுள்ளது, அதன்படி நாங்கள் உடனடியாக வெளியேறுவோம்" என்று கூறியுள்ளார்.
இன்னும் 30 நிமிடங்களில் வெள்ளை மாளிகையின் பத்திரிகையாளர் சந்திப்பு அறையிலிருந்து நான் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தவிருக்கிறேன் என்று டிரம்ப் கூறினார். முதல் பெண்மணி, துணை ஜனாதிபதி மற்றும் அனைத்து அமைச்சரவை உறுப்பினர்களும் நல்ல உடல்நிலையில் உள்ளனர்.
இன்னும் 30 நிமிடங்களில் செய்தியாளர் சந்திப்பு நடைபெறும் என்று டிரம்ப் கூறினார். மேலும், வெள்ளை மாளிகை செய்தியாளர் இரவு விருந்தும் 30 நாட்களுக்குள் மாற்றியமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Post a Comment