ஏவுகணை பலத்தை கைவிடப்போவதில்லை என ஈரானின் உச்ச தலைவர் உறுதி
ஈரானின் அணுசக்தி மற்றும் ஏவுகணைத் திறன்கள் நாட்டின் அடையாளத்துடன் தொடர்புடைய ஒரு தேசிய சொத்து என்றும், அவற்றைப் பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் ஈரானின் உச்ச தலைவர் அறிவித்துள்ளார்.
ஈரானின் அதிகாரப்பூர்வ அரசு தொலைக்காட்சி வெளியிட்ட ஓர் அறிக்கையில் இது கூறப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஈரானின் தொழில்நுட்ப, தொழில்துறை, அத்துடன் அணுசக்தி மற்றும் ஏவுகணை சக்தி ஆகியவை நாட்டின் அடையாளத்திற்கு முக்கியமானவை என்பதால், நாட்டின் நிலம் மற்றும் வான்வெளி பாதுகாக்கப்படுவதைப் போலவே இந்த வளங்களும் பாதுகாக்கப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
பாரசீக வளைகுடா பிராந்தியத்தில் நிலவும் ஸ்திரமின்மை மற்றும் பாதுகாப்பின்மைக்கு அப்பகுதியில் அமெரிக்கப் படைகளின் இருப்பே காரணம் என்றும் உச்ச தலைவர் குற்றம் சாட்டியுள்ளார்.

Post a Comment