இரவில் சமரசம்:கைவிட்ட பங்காளிகள் ?



தேசிய மக்கள் சக்தியின் மின்சக்தி துறை அமைச்சருக்கு எதிராக எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை 104 மேலதிக வாக்குகளினால் அரசாங்கத்தினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது

எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியினால் வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை 104 மேலதிக வாக்குகளினால் அரசாங்கத்தினால் தோற்கடிக்கப்பட்டது. 

ஜக்கிய மக்கள் சக்தியின் பங்காளிக்கட்சிகளது நாடாளுமன்ற உறுப்பினர்களே கைவிட்டுவிட்ட நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வெளிநாட்டில் நிற்பதனால் வாக்களிப்பில் பங்கேற்கவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான செல்வம் அடைக்கலநாதன், மலையக நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், திகாம்பரம், இராதாகிருஸ்ணன்,ஜீவன் தொண்டமான் மற்றும் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட 22 எம்.பி.க்கள் வாக்களிப்பில் பங்கேற்காது ஜக்கிய மக்கள் சக்தியினை கைவிட்டிருந்தனர்.


No comments