காலம் கடப்பதற்குள் தீவிரமாகச் செயல்படுங்கள் - டிரம்ப் மிரட்டல்
தனது 15 அம்ச சமாதான முன்மொழிவுக்கு ஈரான் அளித்த பதிலில் அமெரிக்க அதிபர் அதிருப்தி தெரிவித்திருந்தார்.
தனது 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் பதிவிட்ட மற்றொரு பதிவிலேயே அவர் இக்கருத்தை வெளியிட்டார்.
அவர் ஈரானியப் பேச்சுவார்த்தையாளர்களை வித்தியாசமானவர்கள் மற்றும் விசித்திரமானவர்கள் என்று குறிப்பிட்டார்.
மீண்டும் எழுச்சி பெறுவதற்குச் சிறிதும் வாய்ப்பில்லாத, இராணுவ ரீதியாக முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்ட நிலையில், அவர்கள் ஒரு உடன்பாடு எட்டுமாறு எங்களிடம் கெஞ்சுகிறார்கள் அதைத்தான் அவர்கள் செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.
இருப்பினும், ஈரான் தரப்பு எங்கள் முன்மொழிவை வெறும் பரிசீலனையில் மட்டுமே வைத்துள்ளது என்று கூறியதாக அவர் சுட்டிக்காட்டினார்.
"தவறு'' காலம் கடந்து போவதற்குள் அவர்கள் விரைவில் தீவிரமாகச் செயல்பட வேண்டும். ஏனென்றால் ஒருமுறை அது நடந்துவிட்டால், பின்வாங்குவதற்கு வழியே இல்லை. மேலும் அது நல்லதாக இருக்காது என்று டிரம்ப் ஆவேசமாகக் கூறினார்.

Post a Comment