இலங்கை கடலில் தாக்குதல்:ஈரான் எச்சரிக்கை!



ஈரானின் கடற்கரையிலிருந்து இரண்டாயிரம் மைல்கள் தொலைவில் கடலில் அமெரிக்கா ஒரு அட்டூழியத்தைச் செய்துள்ளதாகஎன ஈரானிய வெளியுறவு அமைச்சர் குற்றஞ்சுமத்தியுள்ளார்.  

இந்திய கடற்படையின் விருந்தினராகச் சென்ற சுமார் 130 வீரர்களை கொண்ட ஈரானின் கப்பலை சர்வதேச கடலில் எச்சரிக்கை இல்லாமல் தாக்கியதாகவும் ஈரானிய வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே இலங்கையை நோக்கி மற்றுமொரு ஈரானிய கப்பல் ஒன்று வருகை தந்துக்கொண்டிருப்பதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஈரானிய போர்க்கப்பல் இலங்கையை அண்மித்த கடற்பரப்பில் தாக்கப்பட்டதாக அமெரிக்கா உறுதிப்படுத்துகின்ற நிலையில், மற்றுமொரு ஈரானிய கப்பல் இலங்கை கடல்பரப்பிற்குள் பிரவேசித்துள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக சஜித் பிறேமதாசா தெரிவித்துள்ளார்.

இதனிடையே இலங்கைக்கு அண்மித்த தெற்கு கடற்பரப்பில் அமெரிக்க தாக்குதலுக்குப் பின்னர் மூழ்கிய ஈரானிய போர் கப்பலில் இருந்த 84 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.

காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக கடற்படை தெரிவித்துள்ளது.


No comments