தையிட்டி விகாரை காணியை விடுவிக்கும் பணிகள் 80 வீதம் பூர்த்தியாம்
தையிட்டி விகாரைக்காக கையகப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிகளை அதன் உரிமையாளர்களிடம் மீள கையளிக்கும் முயற்சிகள் 80 வீதம் பூர்த்தியாகியுள்ளதாக கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர் தெரிவித்துள்ளார்.
யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
"மக்களின் காணி மக்களுக்கே.. " என்பதே எமது அரசாங்கத்தின் நிலைப்பாடு. அதன் அடிப்படையில் தையிட்டி விகாரைக்காக கையகப்படுத்தப்பட்ட தனியார் காணிகளை அதன் உரிமையாளர்களுக்கு மீள கையளிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
புத்த சாசன அமைச்சரின் பணிப்பில் , மாவட்ட செயலர் , தெல்லிப்பழை பிரதேச செயலர் , விகாரைக்குரிய விகாராதிபதி , உள்ளிட்டவர்களை உள்ளடக்கி குழு ஒன்று அமைக்கப்பட்டு , பேச்சுக்கள் நடாத்தப்பட்டு வருகிறது.
அதன் அடிப்படையில் தற்போது காணிகளை அளவிட்டு , அதனை எல்லைப்படுத்தி , உரிமையாளர்களை அடையாளம் காணும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகிறது.
அந்த வகையில் காணிகளை மீள கையளிப்பதற்கான நடவடிக்கைகள் 80 வீதம் பூர்த்தியடைந்துள்ள நிலையில் விரைவில் காணிகளை அதன் உரிமையாளர்களிடம் கையளிப்போம் என தெரிவித்தார்.

Post a Comment