யப்பானில் கடும் பனிப்பொழிவு காரணமாக குறைந்தது 45 பேர் உயிரிழந்தனர்


சனவரி 20 முதல் யப்பான் முழுவதும் பெய்து வரும் கடும் பனிப்பொழிவால் நாடு முழுவதும் குறைந்தது 45 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 500 பேர் காயமடைந்துள்ளனர்.

யனவரி 20 முதல் பனிப்பொழிவால் குறைந்தது 45 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் யப்பானின் தீயணைப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது. வார இறுதியில் யப்பானில் மேலும் கடுமையான பனிப்பொழிவு ஏற்படும் அபாயம் உள்ளது.

நிகாட்டா மாகாணத்தின் வடமேற்குப் பகுதியில் அதிகபட்சமாக 17 பேர் உயிரிழந்துள்ளனர், 170க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

அமோரி நகரம் மற்றும் வக்கானை ஆகிய இடங்களில் பனிமூட்டம் காணப்பட்டது, பல வாகனங்கள் பனியில் சிக்கித் தவித்தன.

யப்பானின் வானிலை ஆய்வு மையம், வார இறுதியில் மேற்கு மற்றும் வடக்கு கடலோரப் பகுதிகளில் மேலும் பலத்த பனிப்பொழிவு இருக்கும் என்று எச்சரித்துள்ளது.

யப்பானின் வடக்கு முதல் மேற்கு வரையிலான கடும் பனிப் பகுதிகளில் போக்குவரத்து இடையூறுகள் குறித்து உள்ளூர்வாசிகள் எச்சரிக்கையாக இருக்கவும், பனிச்சரிவுகள் குறித்து எச்சரிக்கையாக இருக்கவும் அந்த நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.

யப்பான் ஞாயிற்றுக்கிழமை பொதுத் தேர்தலுக்குத் தயாராகி வரும் நிலையில் இந்த எச்சரிக்கை வந்துள்ளது.

No comments