மட்டக்களப்பில் அனுமதியில்லை!
மட்டக்களப்பில் சுதந்திர தினத்தை முன்னிட்டு கல்லடி பாலத்தில் இருந்து காந்தி பூங்காவரை இன்று (4) முன்னெடுக்கப்பட்ட கரிநாள் எதிர்ப்பு ஆர்ப்பாட பேரணியை கோட்டமுனை பாலத்தில் வைத்து காவல்துறையினர் தடுத்து நிறுத்தியிருந்தனர்.
அதனையடுத்து காவல்துறையினருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே முறுகல் ஏற்பட்ட நிலையில் அங்கு வீதியில் அமர்ந்திருந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மட்டக்களப்பில் கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் காணாமல் போன உறுவுகள் சங்கம் பொது அமைப்புக்கள் கரிநாள் ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்தனர்.
அதனையடுத்து மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் இன்நாள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் காணாமல் போண உறவுகள் மற்றும் அரசியல்வாதிகள் உட்பட நூற்றுக்கணக்கான பொதுமக்கள் ஒன்றிணைந்தனர்.
தமிழர்களின் தன்னாட்சி உரிமையை அங்கீகரி எனும் தொனிப் பொருளில் காணாமல் போன உறவுகளுக்கு நீதி வேண்டும், வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயகம், எமது மண் எமக்கு வேண்டும், போன்ற அரசுக்கு எதிரான சுலோகங்கள் ஏந்தியவாறு கோசங்கள் எழுப்பியவாறு ஆர்பாட்ட ஊர்வலமாக காந்தி பூங்காவை நோக்கிச் சென்றனர்.
இந்நிலையில் கோட்டமுனை பாலத்தில் வைத்து ஆர்ப்பாட்டகாரர்களை காந்தி பூங்காவிற்கு செல்ல முடியாது அங்கு 78வது சுதந்திர தின நிகழ்வு ஒன்று இடம்பெற்று வருகின்றதென காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
ஆர்ப்பாட்டக்கார்கள் காவல்துறையினரின் தடுப்பை மீறி செல்ல முற்பட்டதையடுத்து காவல்துறையினருக்கும் ஆர்பாட்டகார்களுக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டது.
பின்னர் கலகம் அடக்கும் காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு ஆர்ப்பாட்டகாரர்களை தடுத்து நிறுத்தியதையடுத்து அவர்கள் அங்கு வீதியில் அமர்ந்திருந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பின்னர் கலைந்து சென்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment