யாழில். சிறுவன் மீது துப்பாக்கி சூடு - நெற்றியில் பட்ட தோட்டா மூளையை ஊடுருவி சென்றமையே உயிரிழப்புக்கு காரணம்


யாழ்ப்பாணத்தில் பொலிசாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த இளைஞனின் உடற்கூற்று ஆய்வில் துப்பாக்கி தோட்டா நெற்றியில் பட்டு , தலைக்குள் ஊடுவி மூளையை துளைத்து சென்றமையால் மரணம் சம்பவத்துள்ளது என தெரிய வந்துள்ளது. 

அல்லைப்பிட்டி பகுதியில் பொலிசாரின் கட்டளையை மீறி பயணித்த வாகனத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் , வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த அல்பினோ அருள் பயாஸ் என்ற 17 வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளான்.

சிறுவனது உடற்கூற்று பரிசோதனை யாழ் போதனா வைத்தியசாலையில் இன்றைய தினம் சட்ட வைத்திய அதிகாரி எம். மயூரதன் முன்னிலையில் நடைபெற்றது. 

அதன் போது துப்பாக்கி சன்னம் சிறுவனின் நெற்றியில் பட்டு ஊடுருவி தலையில் மூளையை தாக்கியமையால் மரணம் சம்பவித்துள்ளது என உடற்கூற்று அறிக்கையில் அறிக்கையிடப்பட்டுள்ளது 

No comments