பலகட்சி ஆட்சிமுறையை அழிப்பதற்கு நடவடிக்கை
பலகட்சி ஆட்சிமுறையை இலங்கையில் இருந்து அழிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க குற்றம் சாட்டினார்.
தேசிய மக்கள் சக்தி அரசின் செயற்பாடுகள் தொடர்பில், எதிர்க்கட்சிகள் இணைந்து கூட்டுக் கலந்துரையாடலை நடத்தியிருந்தன.
இதன்போதே, "பல கட்சி ஆட்சிமுறைக்கு இலங்கையில் ஆபத்து ஏற்பட்டுள்ளது. ஜனநாயகத்தை நிலைநிறுத்த கடுமையாகப் போராட வேண்டும் என்று ரணில் குறிப்பிட்டார்.
மேலும் தெரிவிக்கையில்,
"நாட்டின் ஜனநாயகத் தத்துவங்களுக்கு ஒவ்வொரு நாளும் அச்சுறுத்தல் ஏற்படுகின்றது. வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் மகா சங்கத்தினர் அவமதிக்கப்படுகின்றனர். போலியான குற்றச்சாட்டுக்கள் மூலம் எதிர்க்கட்சிகளை அடக்கி ஒடுக்கும் செயற்பாடுகளும் இடம்பெறுகின்றன.
இத்தகைய செயற்பாடுகளை நாம் தீர்க்கமாக எதிர்க்க வேண்டும். நாட்டின் உறுதித்தன்மையை பாதுகாக்கவும், தேசிய பாதுகாப்பை மேம்படுத்தவும் எதிர்க்கட்சிகள் மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளையும் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரிக்கும் என தெரிவித்தார்.

Post a Comment