யாழில், ஜனாதிபதி கலந்து கொண்ட நிகழ்வுக்கு மக்களை அழைத்து வர 25 இலட்சத்திற்கு மேல் செலவு செய்த மாவட்ட செயலகம்
யாழ்ப்பாணத்தில் கடந்த மாதம் ஜனாதிபதி கலந்து கொண்ட நிகழ்வுகளுக்கு பொது மக்களை அழைத்து வர பேருந்துகளுக்கு யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தினால் 25 இலட்சத்து 66 ஆயிரத்து 885 ரூபாய் நிதி செலவழிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது,
யாழ்ப்பாணத்திற்கு கடந்த மாதம் விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜனவரி மாதம் 16ஆம் திகதி மீசாலை வீரசிங்கம் ஆரம்ப பாடசாலை மைதானத்தில் நடைபெற்ற "இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கான மீள்குடியேற்ற வீடமைப்பு திட்டத்திற்கான உதவி வழங்கும் நிகழ்வு" . இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்காக பொது மக்களை மைதானத்திற்கு அழைத்து வருவதற்காக 11 தனியார் பேருந்துகளை சேவைக்கு அமர்த்தியதாகவும் , அதற்காக 2 இலட்சத்து 23 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்கப்பட்டதாகவும் , மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.
அதேவேளை ஜனவரி 16ஆம் திகதி "முழு நாடும் ஒன்றாக" போதை ஒழிப்பு நிகழ்வுக்காக கொக்குவில் தொழிநுட்ப கல்லூரி மைதானத்திற்கு மக்களை அழைத்து வர இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 75 பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்தியதாகவும் , அதற்காக 23 இலட்சத்து 43 ஆயிரத்து 885 ரூபாய் கொடுப்பனவு வழங்கியதாகவும் மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.

Post a Comment