கிளிநொச்சியில் சந்திரகுமார், சிவஞானம் ஆகியோருக்கிடையில் சந்திப்பு
தமிழரசு கட்சியின் தலைவர் சி.விகே. சிவஞானம் மற்றும் ஐனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் பங்காளி கட்சியான சமத்துவக்கட்சியின் பொதுச் செயலாளருமான மு. சந்திரகுமாரும் கிளிநொச்சி சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை (21) பிற்பகல் 1.30 மணியளவில் கிளிநொச்சியில் அமைந்துளள சமத்துவக் கட்சியின் அலுவலகத்தில் இச் சந்திப்பு இடம்பெற்றது.
அரசியல் நிலைமைகள், எதிர்கால செயற்பாடுகள், புதிதாக உருவாக்கப்படவுள்ள பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பில் தமிழ் மக்களின் தரப்பாக எவ்வாறு செயற்படுவது போன்ற பல்வேறு விடயங்கள் பற்றி கலந்துரையாடினார்கள்.
இச் சந்திப்பில் சமத்துவக் கட்சியின் தலைவர் சு. மனோகரன், கட்சியின் செயற்பாட்டாளர் முன்னாள் போராளி பாலன் மாஸ்ரர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Post a Comment