காலநிலை மாற்றம்: இங்கிலாந்து கடற்கரையில் அதிகளவில் காணப்படும் ஆக்டோபஸ்கள்


இந்த ஆண்டு இங்கிலாந்தின் தெற்கு கடற்கரையில் விதிவிலக்கான அதிக எண்ணிக்கையிலான மத்திய தரைக்கடல் ஆக்டோபஸ்கள் காணப்பட்டன. அவை ஆழமற்ற நீரில் அரிதாகவே காட்சியளித்தன.

செபலோபாட் (காமன் ஆக்டோபஸ் என்றும் அழைக்கப்படுகிறது) ஆக்டோபஸ்கள் பொதுவாக மத்தியதரைக் கடலின் வெப்பமான நீரில் தெற்கே காணப்படுகிறது. அவை இதற்கு முன்பு இங்கிலாந்தில் அதிக எண்ணிக்கையில் காணபடவில்லை.  1950 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இந்த ஆண்டு மிகப் பொியளவில் காணப்படுகின்றன.

ஆக்டோபசின் அதிகரிப்பால் சிப்பி மீன்கள் உற்பத்தித் தொழிலுக்கு சிக்கலை ஏற்படுத்தியது. கோடை மாதங்களில் தங்கள் பிடிப்பு குறைந்தது 60 சதவீதம் குறைந்துள்ளதாக சில தொழிலாளர்கள் கூறுகின்றனர்.

ஆக்டோபஸ்கள் வேட்டையாடும் உயிரினங்கள் என்பதால்  இரால், நண்டு மற்றும் ஸ்காலப்ஸை உண்கின்றன.

இந்த ஆக்டோபஸின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தால், மீனவர்கள் தங்கள் மீன்பிடி முறையை அதற்கேற்ப மாற்றியமைத்துக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மட்டி மீன்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால், அதிகமான உணவகங்கள் தங்கள் மெனுவில் ஆக்டோபஸை உணவை வழங்கத் தொடங்குவதற்கான தேவை அதிகரித்துள்ளது. மேலும் மீனவர்கள் தங்கள் இலாபத்தைத் தக்க வைத்துக் கொள்ள உதவுகிறது.

இந்த கோடையில், இங்கிலாந்து கடல் பகுதியில் மீனவர்களால் 1,200 டன்களுக்கும் அதிகமான ஆக்டோபஸ் பிடிபட்டது.

No comments