வேலன்சுவாமி தொடர்ந்தும் சிகிச்சையில்!

 


தையிட்டி விகாரைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் இலங்கை காவல்துறையால் தாக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட தவத்திரு வேலன் சுவாமிகள் யாழ்.போதனாவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.பிணையில் நேற்றிரவு நீதிமன்றினால் விடுவிக்கப்பட்ட நிலையிலேயே அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

போராட்டம் இன்றையதினம் யாழ். பல்கலைக்கழக பிரதான நுழைவாயில் முன்பாக நடைபெற்றுள்ளது.

தமிழர் தாயகம் மீது பௌத்த ஆக்கிரமிப்புகளை நிறுத்த கோரியும் தமிழர் கலாச்சார அழிப்பினை தடுக்க கோரியும், வடக்கு கிழக்கில் அத்துமீறிய பௌத்த சின்னங்களை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.

போராட்டகாரர்கள் தமிழர் தாயகம் எங்கள் சொத்து, தையிட்டி தமிழர் சொத்து பௌத்த ஆக்கிரமிப்புகளை உடனே நிறுத்து போன்ற கோசங்களை எழுப்பியிருந்தனர்.

அதேவேளை நேற்றைய தினம் தையிட்டியில் காவல்துறையினரால் போராட்டக்காரர்கள் ஜவர் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் மாணவர்கள் கோசங்களை எழுப்பியிருந்தனர்.


No comments