அம்பிட்டியே சுமனரத்ன தேரரை காணோம்!

 


சமூக செயற்பாட்டாளர் ராஜ்குமார் ராஜீவ்காந்த் மற்றும் சட்டத்தரணி  தனுக ரணஞ்சக கஹந்தகமகே ஆகியோர் மட்டக்களப்பு பௌத்த பிக்கு அம்பிட்டியே சுமனரத்ன தேரருக்கு எதிராக முறைப்பாடு ஒன்றை 2023 ஆம் ஆண்டு சமர்பித்திருந்தனர் .

தமிழர்களை  வெட்டி கொல்ல வேண்டும் என அம்பிட்டியே சுமனரத்ன தேரர் பேசியதற்கு  எதிராக மேற்கொள்ளப்பட்ட இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் கடந்த 25 ஆம் திகதி  அவரை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு நீதிவான் தர்ஷினி அண்ணாதுரை உத்தரவிட்டிருந்தார் 

ஆனால் இரு வாரங்கள் (14 நாட்கள்) கடந்து விட்ட பின்னரும் கூட அம்பிட்டியே சுமனரத்ன தேரரை பொலிஸ்  கைது செய்யவில்லை. நீதிவான் நீதிமன்றத்தில் இன்று வழக்கு அழைக்கப்பட்ட போது அம்பிட்டியே சுமனரத்ன தேரரை காணவில்லை என பொலிஸ் பதிவு செய்திருக்கின்றது 

இது தொடர்பாக நீதிவான் நீதிமன்றத்தில் அடுத்த தவணையின் போது தோன்றி விளக்கமளிக்குமாறு பொலிஸ் அத்தியட்சகருக்கு உத்தரவு வழங்கப்பட்டிருக்கின்றது 

No comments