ஜூலி சங் :நாடு திரும்புகிறார்!



இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்க நாடு திரும்ப உள்ள நிலையில் அமெரிக்கத் துணைத் தூதுவர் இன்று காலை தன்னை சந்தித்து தமிழ்த் தேசியப் பிரச்சினை உட்பட பலதரப்பட்ட விடயங்களைக் கலந்துரையாடியதாக எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு மாலை இலங்கை வந்தடைந்துள்ளார். 

டித்வா' புயலினால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு இந்திய அரசாங்கத்தின் ஒத்துழைப்பை மேலும் உறுதிப்படுத்துவதுடன்  தமது விஜயத்தின் போது ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்தின் உயர்மட்டப் பிரதிநிதிகளுடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் தமிழ் கட்சிகள் நாளை கொழும்பில் இந்திய தூதரை சந்திக்கவுள்ளதாக தெரிவித்துள்ள நிலையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கருடனும் சந்திப்பு முன்னெடுக்கப்படுமாவென்ற கேள்வி எழுந்துள்ளது.


No comments