குண்டு வைத்து கைது:மீண்டும் காவல்துறை களத்தில்!



கடந்த அரசுகள் தமிழ் தேசிய செயற்பாட்டாளர்களை பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்களென குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்துவந்திருந்தது.

எனினும் தற்போதைய அரசு அதே பாணியில் வெடிபொருட்கள் மற்றும் போதைப்பொருட்களை வைத்திருந்ததாக கூறி பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுகளை அரங்கேற்றிவருகின்றது.

இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் வன்முறைச் செயல்களில் ஈடுபடும் ஆவா குழுவின் தலைவர் என குற்றஞ்சாட்டி இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவரும் நேற்றையதினம் (11) சுன்னாகம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் கைக்குண்டுகளை வைத்திருந்தாக கூறியே கைதுகள் முன்னெடுக்கப்பட்டதாக கைதானவர்களது மனைவிமார் ஊடகங்களிடையே தெரிவித்துள்ளனர். 

ஆவா குழு வினோத் என்பவர் 2 கிராம் 400 மில்லிகிராம் ஹெரோயினுடனும், அவரது சகா ஒரவர் கைக்குண்டு மற்றும் வாளுடன் கைது செய்யப்பட்டுள்ளதா காவல்துறை தெரிவித்துள்ளது.

சுன்னாகம் காவல்துறையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது இருவரும் வெவ்வேறு இடங்களில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாகவும்  சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments