முல்லைத்தீவில் மனைவியை கத்தியால் வெட்டி விட்டு உயிர்மாய்த்த கணவன்


முல்லைத்தீவில் மனைவி மீது கத்தி வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு , கணவன் கிணற்றில் குத்தித்து உயிரிழந்துள்ளார். 

குமிழமுனை பகுதியை சேர்ந்த வீரசிங்கம் (வயது 75) என்பவரே உயிரிழந்துள்ளார். அவரது மனைவியான வீ. அழகம்மா (வயது 73) என்பவரே படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். 

குறித்த தம்பதியினரின் பிள்ளைகள் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில் ,  தம்பதியினர் இருவரும் , குமிழமுனையில் வசித்து வந்துள்ளார்கள் 

இருவருக்கும் இடையில் கடந்த சில தினங்களாக முரண்பாடு ஏற்பட்டு வந்த நிலையில் ,நேற்றைய தினம் வியாழக்கிழமை இரவு இருவரும் உணவருந்திய பின்னர் தூங்க சென்ற, நிலையில் இன்றைய தினம் அதிகாலை தூக்கத்தில் இருந்த மனைவியை கத்தியால் சரமாரியாக வெட்டி விட்டு , கணவன் வீட்டு கிணற்றினுள் குதித்து உயிர்மாய்த்துள்ளார். 

அந்நிலையில் தனது தாயார் வீட்டினுள் இரத்த வெள்ளத்தில் கிடைப்பதனை வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமராவில் பார்வையிட்ட , மகன் சம்பவம் தொடர்பில் அயலவர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். 

அதனை அடுத்து அயலவர்கள் வீட்டுக்கு சென்று , இரத்த வெள்ளத்தில் இருந்த பெண்ணை மீட்டு மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் , மேலதிக சிகிச்சைக்காக யாழ் . போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். 

அதேவேளை தாக்குதலை மேற்கொண்டவரை அயலவர்கள் தேடிய வேளை அவர் கிணற்றினுள் சடலமாக காணப்பட்டுள்ளார். 

சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , பொலிஸார் முதியவரின் சடலத்தை மீட்டு , உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்ததுடன் , மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 






No comments