காசா திட்டத்தின் முதல் கட்டத்தில் இஸ்ரேல், ஹமாஸ் கையெழுத்திட்டன!

எகிப்பதில் காசா திட்டத்தின் முதல் கட்டத் திட்டத்தில் இஸ்ரேல், ஹமாஸ் கையெழுத்திட்டன.     

இஸ்ரேல்-ஹமாஸ் மோதலின் போது முக்கிய மத்தியஸ்தராக இருந்த எகிப்து , ஷர்ம் எல்-ஷேக் கடற்கரை ரிசார்ட்டில் நடத்திய பல நாட்கள் பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டது.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பேச்சுவார்த்தையாளர்கள், அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் ஆதரவுடன் ஒரு திட்டத்தின் சில பகுதிகளை ஏற்றுக்கொண்டு, பாலஸ்தீன கைதிகளை விடுவிப்பதற்காக மீதமுள்ள பணயக்கைதிகளை விடுவிக்க காசாவில் சண்டையை நிறுத்த ஒப்புக்கொண்டனர்.      

முதற்கட்ட ஒப்பந்தம் கையெழுத்திட்ட செய்தி வெளிவந்ததும் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன மக்கள் கொண்டாடுவதை காணொளிகள் வெளிக்காட்டின.

காசா அமைதி ஒப்பந்தத்தின் முதல் கட்டத்திற்கு இஸ்ரேல் மற்றும் ஹமாஸ்


ஒப்புதல் அளித்துள்ளதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இரண்டு வருடமாக நீடிக்கும் போரை முடிவுக்கு கொண்டு வருவதில், இது ஒரு வரலாற்று மற்றும் முன்னெப்போதும் நிகழாத நிகழ்வாகும் எனவும் டிரம்ப் பெருமிதம் தெரிவித்துள்ளார். எகிப்தில் நடந்த அமைதி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையின் மூன்றாவது நாளில், ஹமாஸ் குழுவினர் அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிக்கும், அதே நேரத்தில் இஸ்ரேல் தனது படைகளை திரும்பப் பெறும் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.      

அமைதியை உருவாக்க, முதல்கட்ட ஒப்பந்தத்தின் படி தனது பாதுகாப்பு படையினரை இஸ்ரேல் திரும்ப பெறும். அனைத்து தரப்பினரும் நியாயமாக நடத்தப்படுவார்கள். அரபு, முஸ்லிம் நாடுகள், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிற்கும் இது ஒரு சிறந்த நாள். இதற்காக, எங்களுடன் இணைந்து பணியாற்றிய கத்தார், எகிப்து மற்றும் துருக்கியின் மத்தியஸ்தர்களுக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம். அமைதியை ஏற்படுத்துபவர்கள் பாக்கியவான்கள். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். 

No comments