கிளிநொச்சியில் தளபாட உற்பத்தி நிலையம் தீ பிடித்து எரிந்தது


கிளிநொச்சி - உதயநகர் பகுதியில் உள்ள மரத்தளபாட உற்பத்தி நிலையத்தில் நேற்றிரவு தீ பரவல் ஏறப்ட்டுள்ளது. 

மரத்தளபாட உற்பத்தி நிலைய உரிமையாளர் நேற்றைய தினம் மாலை உற்பத்தி நிலையத்தை பூட்டி விட்டு வீடு சென்ற நிலையில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.  

தீ பரவியதை அவதானித்தவர்கள் உரிமையாளருக்கு அறிவித்த நிலையில், உரிமையாளரால் கரைச்சி பிரதேச சபை தீயணைப்பு பிரிவுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. 

இந் நிலையில் பிரதேச சபை தீயணைப்பு வாகனம் வருகை தந்தும் பெரும் முயற்சியின் பின்பு மக்களும் சேர்ந்து தீ பரவலை பல மணி நேரத்திற்கு பின்பு கட்டுப்படுத்தியுள்ளனர். 

இதன்போது சில இயந்திரங்கள் மற்றும் தளபாடங்கள் செய்வதற்காக வைத்திருந்த பெறுமதியான மரங்கள் தீயினால் எரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

No comments