கதிர்காமத்தில் ஒரு தொகுதி ஆயுதங்கள் மீட்பு


கதிர்காமம் காவல் பிரிவுக்கு உட்பட்ட யால வனப்பகுதியில் வெஹெரகல நீர்த்தேக்கத்திற்கு அருகில் உள்ள பகுதியில் வைத்து கண்டுபிடிக்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளதாக கதிர்காமம் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் செவ்வாய்க்கிழமை (30) இரவு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கண்டுபிடிக்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களின் விபரங்கள் பின்வருமாறு ; 

T 56  ரக மகசீன்கள்  - 214

LMG (Drum) மகசீன்கள் - 38

MPMG 200 மகசீன்கள் - 11

MPMG 100 மகசீன்கள் - 09

12.7 100 Drum - 01

T 81 மகசீன்கள் - 06

இது தொடர்பில் கதிர்காமம் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments