யாழில். குடல் இறக்கத்தால் 13 நாள் குழந்தை உயிரிழப்பு
பிறந்தது 13 நாட்களேயான குழந்தை, குடல் இறக்கத்தால் உயிரிழந்துள்ளது.
அல்வாய் வடக்கு பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் கடந்த 09ஆம் திகதி மந்திகை வைத்தியசாலையில் குழந்தை பிரசவித்துள்ளார். அந்நிலையில் குழந்தைக்கு சுகவீனம் காரணமாக தாயும் சேயும் அன்றைய தினமே மேலதிக சிகிச்சைக்காக யாழ் , போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்
வைத்தியசாலையில் , சிகிச்சை பெற்று வந்த நிலையில் , சிகிச்சை பலனின்றி குழந்தை நேற்றைய தினம் புதன்கிழமை உயிரிழந்துள்ளது.
குழந்தைக்கு குடல் இறக்கம் ஏற்பட்டமையாலையே இறப்பு சம்பவித்துள்ளது என மரண விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment